TANGEDCO: இவர்களுக்கு இனி கரண்ட் பில் இல்லை!! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட மின்சார வாரியம்!!
திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்தது முதல் மின் இணைப்பு தொடர்பான பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தது.அந்த வரிசையில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் சில வரைமுறைகள் இருந்தது. இந்த இலவச மின்சாரம் பெற வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 50 சென்ட் நிலம் ஆவது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
50 சென்ட் நிலம் இல்லாதவர்கள் அருகில் யாரேனும் நிலம் வைத்திருந்தால் அவர்களுடன் இணைந்து இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினர். அந்த வகையில் இதற்கு விண்ணப்பிக்கும் போது அனைவருடைய கையொப்பம் மற்றும் பட்டா கட்டாயமாக்கப்பட்டது.

இது நடைமுறை இருந்ததையடுத்து 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி இருந்த பொழுது அரைசென்ட் நிலம் வைத்திருந்தாலே போதும் அவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் இந்த திட்டமானது ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பின்பு விண்ணப்பத்திருந்த விவசாயிகளுக்கு மட்டும் தான் என கூறியிருந்தனர்.
ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு விண்ணப்பத்திருந்தவர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காததால் பெருமளவு வருத்தம் தெரிவித்தனர். தற்பொழுது கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி இந்த திட்டம் 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பித்தவர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் தரவுகளை எடுத்து ஆய்வு செய்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது குறித்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட விவசாயிகள் திக்கற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.