கர்ப்பிணிப் பெண்களின் கவனத்திற்கு! சந்திரகிரகணத்தின் பொழுது மறந்தும் இதை செய்யாதீங்க!!
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று(அக்டோபர்28) நடைபெறவுள்ள நிலையில் இந்த பதிவில் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாத மற்றும் மனதில் வைக்கக்கூடிய சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் கடந்த ஆண்டைப் 14ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று(அக்டோபர்28) இரவு நடைபெறவுள்ளது. எப்பொழுதும் சூரிய கிரகணத்தை தொடர்ந்து சந்திரகிரகணம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று(அக்டோபர்28) இரவு 11.31 மணிக்கு தொடங்கவும் சந்திர கிரகணம் நாளை(அக்டோபர் 29) அதிகாலை 3.35 மணிவரை நடைபெறவுள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மறந்தும் செய்யக் கூடாத சில விஷயங்களை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
சந்திரகிரகணத்தின் பொழுது கர்ப்பிணிப் பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்…
* பொதுவாக கிரகணம் என்றாலே கர்ப்பிணிப் பெண்கள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும். மறந்தும் கூட வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. ஏனென்றால் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் வளரும் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
* சந்திர கிரகணத்தின் பொழுது கத்திகள், கத்தரிக்கோல்கள் போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
* சந்திர கிரகணத்தின் பொழுது கர்ப்பிணிப் பெண்கள் எதையும் சாப்பிடக்கூடாது. மருந்துகளை சாப்பிடலாம்.
* கிரகணத்தின் பொழுது கர்ப்பிணிப் பெண்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
* சந்திர கிரகணத்தின் பொழுது கர்ப்பிணிப் பெண்கள் கையில், கழுத்தில் வளையல் போன்ற எந்தவொரு உலகப் பொருட்களையும் அணியக்கூடாது.
* சந்திர கிரகணத்தின் பொழுது தூங்குவது என்பது கூடாது.
* சந்திர கிரகணத்தின் பொழுது கர்ப்பிணிப் எந்தவொரு வேலையையும் செய்யக் கூடாது.