கேரளா ஸ்டைல் முட்டை பெப்பர் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?
முட்டை அதிக புரதம் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும். இந்த முட்டையில் ஆம்லெட், குழம்பு, பொரியல் உள்ளிட்டவைகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் முட்டை பெப்பர் ப்ரை அதுவும் கேரளா முறைப்படி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
*தூள் உப்பு – சிறிதளவு
*மஞ்சள் தூள் – சிறிதளவு
*முட்டை – 3
*பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 1 கொத்து
*பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)
*தக்காளி – 1 (நறுக்கியது)
*இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/4 தேக்கரண்டி
*சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி
*கரம் மசால் – 1/4 தேக்கரண்டி
*கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
*மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
*மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
*கொத்தமல்லி தழை – சிறிதளவு
*கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 முட்டை மற்றும் அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த முட்டைகளின் ஓட்டை நீக்கி இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் தூள் உப்பு மற்றும் மஞ்சள் சிறிதளவு சேர்த்து கலக்கி விடவும். அடுத்து இரண்டாக நறுக்கி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து மிதமான தீயில் மெதுவாக கிளறி விடவும். மஞ்சள் மற்றும் உப்பு கலவை முட்டையில் இறங்கியதும் முட்டையை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து முட்டை வதக்கிய எண்ணெயில் 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி ஒன்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்து 1/4 தேக்கரண்டி சீரகத் தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசால், 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலா கலவையை கொதிக்க விடவும். பின்னர் எண்ணெயில் வதக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து ஒரு கிளறு கிளறி சில நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும். பின்னர் அடுப்பை அணைத்து சிறிதளவு கருவேப்பிலை மற்றும் வாசனைக்காக கொத்தமல்லி தழை சேர்த்து கிளறவும். இவ்வாறு செய்தால் முட்டை ப்ரை மிகவும் சுவையாக இருக்கும்.