கேரளா ரெசிபி: “ஸ்வீட் வாழை சிப்ஸ்” – அதிக தித்திப்பு நிறைந்த சுவையில் செய்வது எப்படி?

0
107
#image_title

கேரளா ரெசிபி: “ஸ்வீட் வாழை சிப்ஸ்” – அதிக தித்திப்பு நிறைந்த சுவையில் செய்வது எப்படி?

நொறுக்கு தீனி என்றால் அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகும். அதுவும் சிப்ஸ் என்றால் சொல்லவே தேவை இல்லை. இந்த சிப்ஸில் காரம் காரம், இனிப்பு, புளிப்பு என பல வகைகள் இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் அதிகம் விளையக் கூடிய பழ வகைகளில் ஒன்றான நேந்திரத்தை வைத்து இனிப்பு சிப்ஸ் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:

*நேந்திர வாழை – 3

*நாட்டு சர்க்கரை – 150 கிராம்

*சுக்குத் தூள் – 2 தேக்கரண்டி

*ஏலக்காய் தூள் – சிட்டிகை அளவு

*அரசி மாவு – தேவையான அளவு

செய்முறை:-

3 நேந்திர வாழையை எடுத்து தோல் நீக்கி கொள்ளவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு அடி கணமான பாத்திரம் வைத்து 150 கிராம் அளவு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இவை பாகாக மாற சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். நாட்டு சர்க்கரை கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கிளறி விடவும்.

பின்னர் சுக்கு பொடி சிறிதளவு சேர்த்து கிளறவும். அடுத்து வாசனைக்காக சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் வாழைக்காய் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க அரிசி மாவு தேவையான அளவு சேர்த்து கிளறவும். அடுத்து அடுப்பை அணைத்து தயார் செய்து வைத்துள்ள இனிப்பு வாழைக்காய் சிப்ஸை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் கேரளா சுவையில் அதிக தித்திப்புடன் இருக்கும்.

Previous articleவீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை!
Next articleதொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!!