பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!
மலையாளத் திரையுலகின் பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து தொண்டை சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரம்பத்தில் மலையாளத் திரையுலகில் தொலைகாட்சித் தொடர்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் பணியாற்றி வந்தார். இதையடுத்து சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பல சீரியல்களை நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தயாரித்துக் வந்தார்.
சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமாகிய ரெஞ்சுஷா மேனன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் அற்புதத் தீவு, பாம்பே மார்ச், ஒன்வே டிக்கெட், காரியஸ்தன், சிட்டி ஆப் கார்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில இன்று(அக்டோபர்30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
35 வயதாகும் நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் சீரியல்கள் தயாரித்து வந்துள்ளார். இதனால் பண நெருக்கடியில் இருந்த நடிகை ரெஞ்சுஷா மேனன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.