தீபாவளி பண்டிகையொட்டி குட் நியூஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!!
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டே மத்திய மற்றும் மாநில அரசுகள் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை அதிகளவு வெளி சந்தையில் விற்று வருகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதாக தெரியவில்லை.
குறிப்பாக பண்டிகை காலங்களில் கட்டாயம் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்களின் இருப்பானது தேவைக்கேற்ப வைத்திருப்பது கட்டாயம். ஆனால் பல ரேஷன் கடைகளில் தற்பொழுது வரை பற்றாக்குறை இருந்து தான் வருகிறது. இதனையெல்லாம் தடுக்கும் விதத்தில் தற்பொழுது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை ஆனது இம்மாதம் 12ஆம் தேதி வர இருப்பதால் தங்கு தடை இன்றி ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் பொருட்கள் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.அது மட்டுமின்றி பொருட்கள் இருப்பை கட்டாயமாக்குவதுடன் பற்றாக்குறை இன்றி மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தீபாவளி 12ஆம் தேதி வருவதையொட்டி இம்மாதம் ஞாயிற்றுக்கிழமையும் நியாய விலை கடை இயங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பொருள்களின் இருப்பை தேக்கி வைப்பதால் இந்த பண்டிகை காலத்தில் அதிகளவு கடத்தல் நடக்க வாய்ப்பு இருக்கும். இதனைத்தடுக்க பொருட்கள் ஏற்றும் போதும் மற்றும் இறக்கும் போதும் அதனை புகைப்படம் எடுத்து உணவு வழங்கல் துறை அதிகாரிக்கு வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் பொருட்கள் கிடைப்பதோடு ரேஷன பொருட்கள் கடத்தலும் தடுக்கப்படும்.