டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் !!

0
74
#image_title
டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்
சாலையில் விபத்து தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் அவர்களுக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றம் தற்போது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் செல்ல பைக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் டிடிஎப் வாசன் பைக் சாகசத்தில் ஈடுபட்டார்.
பைக்கின் ஒற்றை வீலை தூக்கி வீலிங் செய்தார். அப்பொழுது நிலை தடுமாறிய டிடிஎப் வாசன் அவர்கள் கீழே விழுந்தார். மேலும் அவருடைய பைக் பல அடி தூரத்திற்கு சென்றது. இந்த விபத்தில் டிடிஎப் வாசன் அவர்களுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து உடனே சிகிச்சைக்காக  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் அவரை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
இதையடுத்து விசாரணை நடத்திய நீதிமன்றம் டிடிஎப் வாசனை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து டிடிஎப் வாசன் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  தொடர்ந்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் காஞ்சிபுரம் நீதிமன்றம் டிடிஎப் வாசனின் ஜாமீனை ரத்து செய்தது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி டிடிஎப் வாசன் அவர்கள் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அவருடைய யூடியூப் சேனலை மூடிவிட்டு அவருடைய பைக்கை எரித்து விடலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த டிடிஎப் வாசன் அவர்களின் மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம் தற்பொழுது நிபந்தனையுடனான ஜாமீனை அளித்து உத்தரவிட்டு உள்ளார்.
அதாவது எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு தொடர்ந்து 20 நாட்களாக சிகிச்சை பெற்று வருவதால் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று டிடிஎப் வாசன் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதி மன்றம் டிடிஎப் வாசன் அவர்களுக்கு மூன்று வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சென்று கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.