வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!!

0
86
#image_title

வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!!

*கலர் மீன்கள் வளர்க்கும் தொட்டியை படுக்கை அறையிலோ சமையல் அறையிலோ வைக்கக் கூடாது. வீட்டில், ஹாலில் தான் வைக்க வேண்டும்.

*வட கிழக்கு திசையில் வைக்க வேண்டும். முடியாதவர்கள் வடக்கில் வைக்கலாம். வீட்டின் நுழைவாயிலில் உள்ளே சென்றவுடன் இடது பக்கம் வைக்கலாம். மீன் தொட்டியை ஒருபோதும் தெற்கில் வைக்கவே கூடாது.

*மீன்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்க வேண்டும். அதுவும் தங்க நிறம், சிவப்பு நிறம், ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் வளர்த்தால் வீட்டில் செல்வம் சேரும். அதேபோல் 8 கலர் மீன்கள் வைத்து 1 கருப்பு மீன் வைத்தால் வீட்டின் கண் திருஷ்டி குறைய வாய்ப்பு உண்டு. அத்தனையும் ஒரே ரகமாக இருந்தால் நல்லது.

*மீன்கள் நீந்தி சுறுசுறுப்பாக வலம் வர இடம் இருக்கும் அளவிற்கு தொட்டி இருக்க வேண்டும். அப்பொழுது தான் நமது வீட்டு சூழ்நிலையும் நல்ல நிலையில் இருக்கும். குடுவையில் வைத்து நீந்தாமல் மந்தமாக இருந்தால் நமது சூழ்நிலையும் மந்தமாக இருக்கும்.

*எதாவது மீன் இறந்து விட்டால் உடனே அப்புறப்படுத்தி உடனே அதே ரக மீனை வாங்கி அதில் போட வேண்டும். ஏனென்றால் நமக்கு வரும் ஆபத்தை தான் அது உள் வாங்கி தன் உயிரை நீக்கும்.

Previous articleசளி இருமல் தொல்லை? இந்த கஷாயம் செய்து சாப்பிடுங்கள்.. 1 மணி நேரத்தில் சரியாகும்!!
Next articleசிறுநீரகம் செயலிழந்தால் உடலில் இந்த ஐந்து அறிகுறிகள் காட்டும்!! உடனே செக் பண்ணுங்க!!