தீபாவளியை முன்னிட்டு பெண்களுக்கு போனஸ் ட்ரீட்!! வெளிவரப்போகும் அசத்தல் அறிவிப்பு!!
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டம் செயலுக்கு வராமலேயே இருந்தது. கடந்த அண்ணா பிறந்தநாள் அன்று திட்டமானது தொடங்கப்பட்டு தற்பொழுது இரண்டாவது மாதம் பணம் வரை செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கொண்டு கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பணம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் கொடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 11 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.குறிப்பாக பலர் இந்த திட்டத்திற்கு கீழ் தகுதியானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை. இது குறித்து ஆங்காங்கே பல புகார்கள் எழுந்தது.
அதுமட்டுமின்றி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து மகளிருக்கும் இந்த திட்டமானது செல்லாது என்பதை அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையிலும் சில பெண்மணிகள், நாங்கள் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படையில் வந்தாலும் எங்களை ஏன் நிராகரித்தனர் என்று பல கேள்விகளை எழுப்பினர்.
இவர்களுக்கென்று மேல்முறையீடு தொடங்கி அதற்கென்று கால அவகாசமும் கொடுத்தனர். மேற்கொண்டு இதன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். கலைஞர் உரிமைத்தொகையானது மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.
அந்தவகையில் தீபாவளி பண்டிகையானது இம்மாதம் 12ம் தேதி வர உள்ளது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பே கலைஞர் உரிமைத்தொகையானது வழங்க ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு தீபாவளி பண்டிகைக்கு முன்பு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டால் அது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே இது குறித்து ஆலோசனை செய்து வருவாதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி இதுகுறித்த முடிவை முதல்வர் அவர்கள் அறிவிப்பார் என்று கூறியுள்ளனர்.