சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

0
111
#image_title

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் நாளை(நவம்பர்4) மிக மிக கனமழை பெய்யவுள்ளதாகவும் ஆரஞ்ச் அலர்ட் விடப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தெற்கு வங்கக்கடலில் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(நவம்பர்3) பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும் இன்று(நவம்பர்3) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதே போல நவம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று நேற்று(நவம்பர்2) வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை(நவம்பர்4) மற்றும் நாளை மறுநாள்(நவம்பர்5) தமிழகம் முழுவதிலும் பரவலாக மழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது என்று தற்பொழுது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Previous articleபிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் காதல்! மக்கள் எடுத்த திடீர் முடிவால் காதலர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!
Next articleவில்லனாக இருந்து காமெடியாக மாறிய நடிகர்கள்…. யார்யார் தெரியுமா?