தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

**பௌர்ணமி அன்று காலை அல்லது மாலை வீட்டில் அம்மனுக்கு ஜவ்வாது தீபம் ஏற்றி வழிபடலாம்.

பௌர்ணமி தீபம் ஏற்ற தேவையான பொருட்கள்:

*அகல் விளக்கு

*நல்லெண்ணெய்

*திரி

*ஜவ்வாது

*பச்சை கற்பூரம்

செய்முறை விளக்கம்…

ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி 2 திரி போட்டுக் கொள்ளவும். அடுத்து 2 சிட்டிகை ஜவ்வாது, 1 துண்டு பச்சை கற்பூரம் போட்டு தீபம் ஏற்றவும்.

பின்பு ஒரு கிண்ணத்தில் குங்குமம் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய தட்டில் ஒரு வெற்றிலை வைக்கவும்.

ஒரு சிட்டிகை குங்குமத்தை எடுத்து “ஓம் சக்தி” என்று சொல்லி அம்மன் படத்திற்கு முன் வெற்றிலை மீது குங்குமத்தை போட்டு அர்ச்சனை செய்யவும்.

இதே போல் 108 முறை அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனை செய்து வழிபடவும். பின்பு அந்த குங்குமத்தில் இருந்து சிறிது எடுத்து

“ஓம் மஹிமா ஷக்த்யை திலக தேவ்யை பூர்ண ஷக்திதா நமோ நமஹ”

என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லி குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு தீர்க்க சுமங்கலி வரத்தை தந்தருள மனதார வேண்டிக் கொள்ளவும்.

அந்த குங்குமத்தை ஒரு டப்பாவில் போட்டு வைத்து அடுத்த பௌர்ணமி வரை தினமும் “ஓம் மஹிமா ஷக்த்யை திலக தேவ்யை பூர்ண ஷக்திதா நமோ நமஹ” என்ற இந்த மந்திரத்தை மட்டும் சொல்லி குங்குமம் வைக்கவும். இப்படி செய்து வர கணவர் நீண்ட ஆயுளை பெற்று மனைவி தீர்க்க சுமங்கலியாக இருப்பாள் என்பது ஐதீகம். அதுமட்டும் இன்றி கணவன் மணிக்குள் அன்யோன்யம் அதிகரித்து திருமண வாழக்கை சதோஷத்தை கொடுக்கும்.