வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!!

Photo of author

By Divya

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!!

Divya

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!!

1)உங்கள் வருமானத்திற்கும் குறைவாக செலவழிக்க வேண்டும். வருமானத்திற்கு ஏற்றார் போல் ஒரு பட்ஜெட் தயாரித்து அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். உங்கள் வருமானத்தில் இருந்து 1 ரூபாய் வெளியில் சென்றாலும் அதை பட்ஜெட் நோட்டில் எழுதி வைக்க பழகவும். இவ்வாறு செய்வதன் மூலம் மாத இறுதியில் நாம் செய்த செலுவுகளை எடுத்து பார்த்தால் நாம் செய்துள்ள தேவையற்ற செலவு என்ன என்பது தெளிவாகத் தெரிந்து விடும். இதன் மூலம் அடுத்த முறை இதே தவறை செய்யாமல் இருப்போம். இதன் காரணமாக பணம் சேமிக்கப்பட்டு கடன் வாங்குவதில் இருந்து தப்பித்து விடலாம்.

2)உங்கள் வருமானத்தை பெருக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லலாம். நீங்கள் பார்ட் டைம் ஜாப் செய்யலாம். ஏற்கனவே வேலை பார்க்கும் இடத்தில் ஓவர் டைம் செய்யலாம். ஏதேனும் ஒரு சிறு தொழில் செய்யலாம்.

3)EMI முறையில் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இப்படி வாங்கி பழகி விட்டால் இதே வாடிக்கையாகி விடும். இதனால் நாம் எப்பொழுதுமே கடனாளிகளாகவே இருப்போமே தவிர சேமிப்பு என்ற ஒன்று வாழ்வில் இருக்காது.

4)கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம் கிரெடிட் கார்டு இருந்தால் தேவை இல்லாத பொருட்களை வாங்கி குவிக்க ஆரமித்து விடுவோம். இதனால் எளிதில் கடனில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகிவிடும்.

5)தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளுக்கு நாம் இடம் கொடுக்கும் பொழுது நமக்கு தேவையான செல்வுகள் செய்ய பணம் இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

6)மிகக் குறைவான வருமானம் இருக்கும்பொழுது நமது பிள்ளைகளை அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் படிக்க வைப்பதினால் கடன் ஏற்படுகிறது. இதனால் வருமானத்திற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைப்பது நல்லது.

7)மருத்துவக் காப்பீடு எடுத்து வைப்பது நல்லது. அவசர மருத்துவ தேவை ஏற்படும் பொழுது மருத்துவ காப்பீடு நமக்கு கடன் வாங்காமல் இருக்க உதவுகிறது.

8)Emergency Fund: ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை அவசரத் தேவைக்காக எடுத்து வைப்பதை வழக்கமாக்கி கொள்ளவும். அவசரத் தேவை ஏற்படும் பொழுது கடன் வாங்காமல் சேமித்த பணத்தை எடுத்து செலவுகளை பார்த்து கொள்ள முடியும்.