அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று அதாவது நவம்பர் 7ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்நிலையில் அமைச்சரோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன் அவர்களிடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்று பதில் அளித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது 68வலு பிறந்தநாளை இன்று(நவம்பர்7) கொண்டாடுகிறார். திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் “கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு” என்று கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள வாழ்த்துக்கள் கூறி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று(நவம்பர்7) சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காற்றின் மூலமாக குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் பிறகு நடிகரும் மங்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் “இன்றயை தினம் என்னுடைய பிறந்த தினம் என்பதை விட இது ஒரு சிறப்பான தினம். தற்பொழுது தொடங்கி வைத்த கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் இயந்திரமான வாயு ஜெல் என்ற இயந்திரம் இரண்டு வருடங்களாக ராஜ்கமல் நிறுவனத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம்.
இதை நான் இப்போது இங்கு செய்வதால் மற்ற மருத்துவமனைகளிலும் கிணற்றிலிருந்து குடி நீர் எடுப்பதற்கான இயந்திரத்தை நிறுவ என்னைப் போன்றோர் அரசுக்கு கை கொடுப்பார்கள் என்று நினைக்கின்றேன். இந்த இயந்திரத்தை இந்தியாவில் ஐஐடியில் தயார் செய்து உள்ளனர். இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை அரசுக்கு முன் மாதிரியாக பரிந்துரை செய்கின்றேன். இது போலவே பல இடங்களில் மாற்றங்கள் வர வேண்டும்” என்று கூறினார். 7
மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன் அவர்களிடம் திமுக கட்சியுடன் கூட்டணியா அல்லது திமுக கட்சியுடன் கூட்டணி வைக்க அடித்தளமா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ” இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தின் தொடங்கியது நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் யாரும் கட்சி சார்ந்தவர்கள் அல்ல. மனிதம் சார்ந்தவர்கள். நாங்கள் எல்லாருமே மனிதர்கள். இங்கு உள்ளவர்கள் அனைவருக்கும் தனியாக கட்சி இருக்கின்றது. அவர்களுக்கு என்று விசுவாசம் உள்ளது.
இந்த இடத்தில் எங்களை ஒன்று சேர்த்தது கட்சி கிடையாது. எங்களுடைய நல்லெண்ணம் தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளது. ஆனால் மருத நேயம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மனித நேயத்தை எந்த கட்சியினரும் விடவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. இந்த மனித நேயம் தொடர்பான நட்பு தொடரும். இது அரசியல் கிடையாது” என்று கமல்ஹாசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.