உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!!

0
119
#image_title

உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!!

தீர்வு 1:

நீங்கள் நகை வைத்திருக்கும் பெட்டி உங்கள் வீட்டின் குபேர மூலையில் உள்ளதா என்பதை கவனியுங்கள்.

அல்லது பீரோவில் நகை வைத்தாலும் பீரோ குபேர மூலையில் வடக்குப் பார்த்து உள்ளதா என்பதை கவனியுங்கள்.

குபேர மூலை என்பது வீட்டின் தென் மேற்கு பகுதி ஆகும். இந்த மூலையில் நகை பணம் வைத்தால் இரண்டும் அதிகம் பெருகும்.

நகை வைக்கும் பெட்டிக்குள் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை நகைகளோடு சேர்த்து வைக்கவும். உங்கள் நகைகள் அந்த கண்ணாடியில் தெரியும்படி வைக்கவும். இவ்வாறு செய்யும்போது உங்கள் நகைகள் இரட்டிப்பு ஆகும் என்பது ஐதீகம்.

தீர்வு 2:

தங்கம் வீட்டில் தங்குவதற்கும் அடகுக் கடைக்குப் போகாமல் இருப்பதற்கும் இதை செய்து பாருங்கள்.

பௌர்ணமி அன்று அல்லது வெள்ளிக் கிழமை அன்று செய்யவும். நீங்கள் எங்கு நகை வைத்து இருக்கிறீர்களோ அங்கு ஒரு சிறிய மஞ்சள் துணியில் 5 கிராம்பு, 5 ஏலக்காய், 5 பச்சைக் கற்பூரம் வைத்து முடிச்சி போட்டு வைத்து விடவும்.

9 கிராம்பு, 9 ஏலக்காய், 5பி பெரிய துண்டு பச்சைக் கற்பூரம் வைத்து முடிச்சி போட்டு வைத்து விடவும். இதை மாதம் ஒரு முறை மாற்றி பழையதை கால் படாத இடத்தில் போடவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர நிச்சயம் வீட்டில் தங்கம் தாங்கும்.

தீர்வு 3:

9 வாரங்கள் வெள்ளிக்கிழ மை இந்த சிறிய பூஜையை வெள்ளிப் பொருளுக்கு செய்தால் தங்கம் நிச்சயம் வீடு தேடி வரும்.

வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது எதாவது ஒரு வெள்ளிப் பொருட்களை (மோதிரம் / காயின்) எடுத்துக் கொண்டு பன்னீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய தட்டில் ஒரு வெற்றிலை வைத்து அதன் மீது இந்த வெள்ளியை வைக்கவும். மூன்றிற்கும் மஞ்சள் குங்குமம் வைத்து வெள்ளியைச் சுற்றி பூக்கள் வைக்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சள் எடுத்துக் கொண்டு அதில் சிறிது பச்சைக் கற்பூரத் தூள் செய்து போட்டு பின் பன்னீர் ஊற்றிக் குழைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வெற்றிலையை எடுத்து அந்த மஞ்சளில் நனைத்து வெள்ளிப் பொருள் மீது 27 முறை தெளிக்கவும். ஒவ்வொரு முறை தெளிக்கும் போதும் “ஓம் ஸ்ரீம் மஹாலஷ்மியை நமஹ” என்று சொல்லவும்.

பின்பு கற்பூர ஆர்த்தி காட்டி பூஜை முடித்து 1 மணி நேரம் கழித்து வெற்றிலையோடு வெள்ளியை நகைப் பெட்டி அல்லது பீரோவில் நல்ல நேரம் பார்த்து வைக்கவும்.

மறுநாள் சனிக்கிழமை காலையில் வெற்றிலையை கால் படாத இடத்தில் போட்டு விடவும்.

Previous articleஇஸ்ரோ விண்வெளி மையம் ரூ.63,000/- ஊதியத்தில்.. வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
Next articleஒரு கைப்பிடி அளவு விபூதியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளத்தை காண முடியும்!!