குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!!

Photo of author

By Divya

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!!

நம்மில் பலரது வீட்டு பூஜை அறையில் இருக்கும் குத்து விளக்கு குறித்த ஆச்சர்யப்பட வைக்கும் அற்புத தகவல்கள் இதோ.

விளக்கேற்றும் முறையும் பலனும்:-

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.

இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும்.

மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்.

நான்கு முகம் ஏற்றினால் – பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.

ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மையும், ஐஸ்வர்யமும் பெருகும்.

விளக்கேற்றும் திசை:

கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி

மேற்கு – கடன், தோஷம் நீங்கும்

வடக்கு – திருமண தடை அகலும்

தெற்கு – மரணபயம் உண்டாகும்

விளக்கேற்றும் போது செய்ய வேண்டியவை:

**விளக்கேற்றும் போது பின் கதவை சாத்த வேண்டும்.

**எக்காரணத்தை கொண்டும் ஆண்கள் விளக்கை அணைக்க கூடாது.

**செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது.

குத்து விளக்கு ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள்:-

குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளை திரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்ட லட்சுமி அருள் கிடைக்கும்.

இதே போல் மஞ்சள் திரியிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரியிட்டால் நம் கடன் தொல்லை தீரும்.

குத்து விளக்கு உணர்த்தும் இந்து கடவுள்கள்:-

விளக்கின் அடிப்பகுதியில் பீடம் மலர்ந்த தாமரைப்பூ போல் அகன்று வட்டமானதாக இருப்பதால் தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.

தண்டு பாகம் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.

தண்டுக்கு மேலுள்ள எண்ணெய் வார்க்கும் அகல், கங்கையை சடையுள் வைத்துக் கொள்ள சிவனைக் குறிக்கும்.

திரி எறிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐந்து முகமுடைய மகேஸ்வரனைக் குறிக்கும்.

ஆகலின் மேல் அமைந்துள்ள கும்பக் கவசம் போன்ற உச்சிப் பகுதி சிவலிங்கம் போலிருக்கும் சதாசிவனை குறிப்பதாக உள்ளது.

ஆக ஐந்து தெய்வ வடிவங்களின் சின்னமாக அமையும் பெருமாளுடையது குத்து விளக்கு.