இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!!

Photo of author

By Divya

இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தற்பொழுது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள Director பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஜனவரி 01 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI)

பணி: Director

பணியிடங்கள்: Director பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதுனும் ஒரு பிரிவில் முனைவர் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும். அதனோடு பணி சார்ந்த துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 56 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level-13 என்ற ஊதிய அளவின் படி மாதம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: Director பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: Director பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://uidai.gov.in/images/document_-_2023-07-11T134554849.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய ஜனவரி 01-01-2024 இறுதி நாள் ஆகும்.