நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க !!

0
130
#image_title
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது வரை பல நன்மைகளை தரும் வெண்டைக்காய் தண்ணீரை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. சாதாரணமாக வெண்டைக்காயை சாப்பிடும் பொழுது மூளை ஆரோக்கியம் பெறும் என்று கூறுகின்றனர்.
வெண்டைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் இ, தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் வெண்டைக்காயில் மட்டுமில்ல வெண்டைக் காயை ஊற வைத்த தண்ணீரிலும் இருக்கின்றது.
வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர் எப்படி செய்வது..?
வெண்டைக்காயை ஊற வைத்த தண்ணீரை தயார் செய்வதற்கு முதலில் வெண்டைக் காயை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னர் சிறிது சிறிதாக நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை முந்தைய நாள் இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இந்த தண்ணீரை மறுநாள் காலையில் குடிக்கலாம். அவ்வாறு குடிக்கும் பொழுது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. இதை தொடர்ந்து குடித்து வரும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும்.
மேலும் வெண்டைக்காயில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதனால் இந்த வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் குடித்து வரலாம். அவ்வாறு குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
மேலும் இந்த வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை சர்க்கரை நோயாளிகள் குடித்து வரலாம். அவ்வாறு குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இதில் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் உடலில் உள்ள எலும்புகளை வலிமைபடுத்த உதவுகின்றது.
Previous article“சூடம் + தேங்காய் எண்ணெய்” போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!
Next article2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் – தயார் செய்வது எப்படி?