இனி சிம் கார்டு வாங்க இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!! நாளை முதல் அமலுக்கு வருகிறது புது விதி – மத்திய அரசு தகவல்..!!

0
110
#image_title

இனி சிம் கார்டு வாங்க இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!! நாளை முதல் அமலுக்கு வருகிறது புது விதி – மத்திய அரசு தகவல்..!!

இந்தியாவில் இனி சிம் கார்டு வாங்க மற்றும் விற்க தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள புது விதியை கட்டாயாமாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் அபராதமுன், சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

நம்மில் பலர் பல்வேறு நிறுவங்களின் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இனி புதிதாக சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் புது விதியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த முக்கிய காரணம் போலி மோசடிகள், சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக தான் என்று தொலைத் தொடர்பு ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொலைத் தொடர்பு ஆணையம் விதித்துள்ள கண்டிஷன்கள்:-

**வாடிக்கையாளர்கள் புதிதாக சிம் கார்டு வாங்கினால் ஆதார் ஸ்கேனிங் கட்டாயம் ஆகும்.

**இனி மொத்தமாக சிம் கார்டுகள் வாங்குவது கட்டுப்படுத்தப்படுகிறது. தனி நபர் ஒருவர் வணிக இணைப்பு மூலம் ஆவணங்களை கொடுத்து தான் இனி சிம் கார்டுகளை மொத்தமாக பெற முடியும். இந்த புது விதி கொண்டு வரப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் இதற்கு முன் ஒரு ஐடிக்கு 9 சிம் கார்டுகளை பெற்றதை போல் இனியும் பெற முடியும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

**சிம் கார்டு நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் சிம் கார்டு எண்ணை டீ – ஆக்டிவேட் செய்த 90 நாட்களுக்கு பின்னர் தான் அந்த எண்ணை மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

**நாளை முதல் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் தங்களுடைய பிரான்சைசி, பாயின்ட் ஆப் சேல் முகவர்களின் விவரங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சமூக விரோதிகள், சிம் மோசடி செயல்களில் ஈடுபடும் பாயின்ட் ஆப் சேல் முகவர்களை மொத்தமாக அகற்ற முடியும்.

**இந்த புது விதியை பின்பற்ற தவறும் சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், சிறை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

Previous article“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
Next articleகேரளா ஸ்டைல் கோழி பிரட்டல் – சுவையாக செய்வது எப்படி?