நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

0
124
#image_title

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று(டிசம்பர்5) விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த புயலின் பாதிப்பு மற்றும் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிகம் இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து தமிழக அரசும் மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சென்னை முழுவதும் கனமழை பெய்து வந்ததால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இறக்கமாக உள்ள பகுதிகளில், வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பொதுப் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

ஏற்கனவே புயல், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது போலவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Previous articleவித்தியாசமான வெற்றிலை லட்டு! எப்படி தயார் செய்வது!!
Next articleஅடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!!