உங்கள் வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 10 மூலிகை செடிகளும்.. அதன் பயன்களும்..!!

0
84
#image_title

உங்கள் வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 10 மூலிகை செடிகளும்.. அதன் பயன்களும்..!!

1)துளசி செடி

துளசி ஓர் அற்புத மூலிகை செடியாகும். இவை சளி, இருமலுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. துளசி இலையுடன் மிளகு, வெற்றிலை, வேம்பு பட்டை சேர்த்து கஷாயம் செய்து பருகினால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.

2)சோற்றுக் கற்றாழை

சோற்று கற்றாழை வளர அதிகம் தண்ணீர் பயன்படுத்த தேவை இல்லை. இந்த கற்றாழை சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த கற்றாழையில் ஜூஸ் செய்து அருந்தினால் பெண்களுக்கு ஏற்படும் நீர்கட்டி, வெள்ளைப்படுதல், மலட்டு தன்மை ஆகியவை சரியாகும்.

3)தூதுவளை

தூதுவளை இலையை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால் சளி, இருமல் பாதிப்பு முற்றிலும் குணமாகும். இந்த இலை எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.

4)கரிசலாங்கண்ணி

இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் கல்லீரல் வலுப்பெறும்.

5)பொன்னாங்கண்ணி

இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

6)நிலவேம்பு

சிறியாநங்கை என்று அழைக்கப்படும் நிலவேம்பை வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டும். இந்த நிலவேம்பின் கஷாயம் செய்து அருந்தினால் டெங்கு காய்ச்சல் முழுமையாக குணமாகும்.

7)ஓமவல்லி

இதன் இலையை அரைத்து சாறு பிழிந்து தேன் சேர்த்து அருந்தினால் தொண்டைப் புண், தொண்டை எரிச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும். அதேபோல் கஷாயம் செய்து அருந்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

8)ஆடாதோடை

இந்த இலை கசப்புத் தன்மை கொண்டது. இதில் கஷாயம் செய்து பருகினால் இருமல் பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

9)அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் இரத்த அழுத்தம், தோல் தொடர்பான பாதிப்பு சரியாகும்.

10)பூனை மீசை

இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக சாப்பிட்டு வர சிறுநீரகம் தொடர்பான நோய் பாதிப்புகள் குணமாகும்.