உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இவ்வாறு செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்..!!

0
105
#image_title

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இவ்வாறு செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்..!!

நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். குல தெய்வ கோயிலுக்கு செல்வது என்பது ஒரு குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். ஒரு நல்ல காரியம் எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியாக வேண்டும் என்றால் உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செய்வது என்பது நல்லது.

அதேபோல் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்க குலதெய்வ கோயிலுக்கு போகும் போது சில விஷயங்களை செய்வது நல்லது. இவ்வாறு செய்வதால் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

குலதெய்வத்தை வழிபாடும் முறை…

**நாம் நமது குலதெய்வம் கோயிலுக்கு சென்றால் அந்த கோயிலில் உள்ள கோபுரத்தை தான் முதலில் பார்த்து மனதார வணங்க வேண்டும். இப்படி செய்வதினால் நமது குலதெய்வங்கள் மிகவும் மகிழ்ச்சி அடையும்.

**குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்த பின் அந்த தெய்வத்தை மனதில் பரிபூரணமாக நினைத்து ஒரு நாள் விரதம் இருந்து குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். இப்படி செய்வதினால் உங்கள் குலதெய்வம் மிகவும் மகிழ்ச்சி அடையும்.

**குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது அந்த எல்லை மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டால் நமக்கு அந்த தெய்வம் சக்தியை வழங்கும்.

**உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்வது அல்லது பொங்கல் வைப்பது இது போன்ற எந்த ஒரு விஷயங்களை செய்திருந்தாலும். அதை முடித்த பிறகு குலதெய்வத்திடம் சென்று உங்கள் குறைகள், மனக் கஷ்டங்கள், பிரச்சனைகளை மனதில் சொல்லி வேண்டுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் அகலும்.

**உங்கள் பிராத்தனை புடிந்த பிறகு குலதெய்வத்திற்கு எலுமிச்சை அல்லது பூசணிக்காயில் ஒரு திருஷ்டி கழிக்கவும். இந்த திருஷ்டி கழிப்பதை அந்த கோயிலில் உள்ள பூசாரித்தான் எடுக்க வேண்டும். இப்படி செய்வதினால் உங்கள் குலதெய்வம் மிகவும் உற்சாகமடையும்.

**உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுத்து, கோயிலில் ஏதாவது பழுதடைந்திருந்தால் அதனை சரி செய்து கொடுக்கலாம். இவ்வாறு செய்வதினால் அந்த தெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

Previous articleஉங்கள் வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 10 மூலிகை செடிகளும்.. அதன் பயன்களும்..!!
Next articleஉங்கள் முடி அடர்த்தியாக வளர தலைக்கு 4 சின்ன வெங்காயத்தை பயன்படுத்துங்கள் போதும்..!!