சனிக்கிழமையில் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

Photo of author

By Divya

சனிக்கிழமையில் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் சில விஷயங்களை செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. அந்த வகையில் இந்த சனிக்கிழமை நாளில் என்ன செய்யக் கூடாது என்பதை பற்றிய விவரம் இதோ.

1)சனிக்கிழமை அன்று இரும்பு சம்மந்தபட்ட பொருட்களை வாங்கக் கூடாது. பொருள் சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும்.

2)சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக் கூடாது. எந்த எண்ணையாக இருந்தாலும் சனிக்கிழமை அன்று வாங்கினால் அடிக்கடி கடனில் சிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

3)மஹாலட்சுமிக்கு உகந்த பொருளான உப்பை தப்பி தவறியும் சனிக்கிழமையில் வாங்கி விடாதீர்கள். இவ்வாறு வாங்கினால் தொழில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

4)வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களான துடைப்பம், மாப் உள்ளிட்டவற்றை ஒருபோதும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது.

5)சனி பகவானுக்கு உரிய எள் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது.

6)சமையலுக்கு உபயோகிக்கும் மாவு பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் நினைத்த காரியங்களில் இடையூறுகள் ஏற்படும்.

7)கூர்மையான ஆயுதங்களை சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் வீட்டில் தீராத துன்பமும், பிரச்சனைங்களும் ஏற்படும்.