பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

Photo of author

By Divya

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

Divya

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இரண்டு சுத்தமான வெற்றிலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கொட்டை பாக்கு வைத்து சிறிது பச்சைக் கற்பூரம் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 3 ஏலக்காய், 3 கிராம்பு(இலவங்கம்) வைத்து ஒரு மஞ்சள் நூலால் கட்டி விடவும்.

அதை அப்படியே கொண்டு போய் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். வாரம் ஒரு முறை அந்த வெற்றிலையை மாற்றி வெள்ளிக்கிழமை இதே போல் வைக்கவும். மீதி பொருட்களை மாதம் ஒரு முறை மாற்றினால் போதும்.

மாற்றும் பொழுது பழையதைச் செடிகளில் போட்டு விடலாம். அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இதைப் பணப் பெட்டியில் வைக்கும் பொழுது “ஓம் ஸ்ரீ மஹாலஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வைப்பது மிகவும் நல்லது.

மனதார வேண்டி இதை தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வர நிச்சயம் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்கத் தொடங்கும்.