இது தெரியுமா? LPG சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.50 லட்சம் இலவச காப்பீடு!
இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் LPG சிலிண்டர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த LPG சிலிண்டர் உணவை எளிதில் சமைக்க முடிவதால் அதிகளவில் நேரம் மிச்சமாகிறது. தற்பொழுது நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் கேஸ் இனிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிறு தவறு நடந்து விட்டால் கூட உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். சிலிண்டர் பயன்படுத்தும் போது விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தெரிய வேண்டும். ஒருவேளை சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்தால் எவ்வாறு விபத்தை தவிர்க்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
கேஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் காப்பீடு பெறுவது எப்படி?
நாட்டில் கேஸ் இணைப்பை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கேஸ் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் மூலம் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
கேஸ் கசிவு அல்லது விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்கபடுகிறது. இந்த காப்பீட்டை காப்பீட்டு நிறுவனம் மற்றும் கேஸ் நிறுவனம் இணைந்து வருகிறது.
கேஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் விபத்து ஏற்பட்ட 30 நாட்களுக்குள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறும் இடத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.
வீட்டில் கேஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் அதற்கு ரூ. 2 லட்சம் வரை காப்பீடு வழங்கபடுகிறது.
கேஸ் சிலிண்டர் விபத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
காயம் ஏற்பட்டால் நபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
சிலிண்டர் காப்பீடு பெற தேவையான ஆவணங்கள்:-
*FIR காப்பி
*மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான பில்
*இறந்த நபர்களின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்
இந்த ஆவணங்களை விபத்தால் பாதிக்கப்ட்டவர்கள் தாங்கள் கேஸ் இணைப்பு பெறும் நிறுவனத்தில் வழங்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு உரிய காப்பீட்டை பெற்றுக் கொடுப்பார்கள்.