சேலத்தில் டிகிரி படித்த பெண்ணிடம் 6 லட்சம் மோசடி இளைஞர்களே உஷார்

0
220
#image_title

என்னதான் படித்து இருந்தாலும்  சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்த்தேன் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ரூ.6 லட்சம் மோசடி செய்திருப்பது சேலத்தில் மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

படிக்காதவர்கள் தான் ஏமாந்து போகிறார்கள் என்றால், படித்த இளைஞர்களே இன்றைய காலகட்டத்தில் ஏமாந்து விடுகிறார்கள். சிறிய பணமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் 6 லட்சம் என்பது மிகவும் அதிகமே.

 

சேலத்தில்  ஆறு லட்சம் ஒரு பெண்ணிடம் அதுவும் டிகிரி படித்த பெண்ணிடம் ஏமாற்று வேலை நடந்துள்ளது.

 

சேலத்தில் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி ரோடில் டிகிரி படித்த பெண் பகுதி நேர வேலை தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்படி வேலை தேடிக் கொண்டிருந்த இந்த பெண்ணை ஏமாற்றியது ஒரு மர்ம குழு.

 

அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட அந்த மர்மக்குழு யூட்யூப் வீடியோக்களுக்கு லைக் செய்து அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் உங்களுக்கு பணம் அனுப்பப்படும் என அந்த மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.

 

அப்படி youtube வீடியோக்களுக்கு லைக் மற்றும் ஷேர் செய்து ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய அ ந்த பெண்ணிடம் ரூ 6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் அருகில் உள்ள மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதைத் தொடர்ந்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

படிக்காதவர்கள் இப்படி ஏமாற்று வேலை செய்திருந்தால் கூட ஏதாவது ஒப்புக் கொள்ளலாம்.  ஆனால் படித்தப்பட்டதாரி பெண் இது மாதிரி ஏமாந்து உள்ளது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளத.  இதில் நெட்டிசன்கள் வேற கலாய்த்து வருகின்றனர்.

அருகில் உள்ளவர்கள் கேட்டால் காசு இல்லை என சொல்ல வேண்டியது! ஆனால் இப்படி ஏமாந்து விட வேண்டியது! என்று நெட்டிசன்கள்  கலாய்த்து வருகின்றனர்

Previous articleசேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!
Next articleரயில்வேயில் பகுதி நேர வேலை 36,00 சம்பளம்!