சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

0
189
#image_title

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சொதப்பிய முதல்வர் ஸ்டாலினை மக்கள் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்பொழுது சேலம் மாடர்ன் தியேட்டரஸ் விவகாரத்தில் தலையிட்டு புதிய பிரச்சனையை கிளப்பி வருகிறார்.

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டரஸ் கடந்த 1935 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ஆகும். இந்த இடத்தில் 100க்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்ளிட்டவர்களுக்கு இந்த மாடர்ன் தியேட்டரஸ் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். சென்னைக்கு அடுத்தபடியாக திரைப்படம் எடுக்க அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்டூடியோ என்றால் அது இந்த மாடர்ன் தியேட்டரஸ் தான்.

ஆனால் தற்பொழுது இந்த வளாகம் குடியிருப்பு பகுதிகளாக உருவெடுத்து விட்டது. மாடர்ன் தியேட்டரஸ் நுழைவு வாயில் மட்டும் தற்பொழுது நினைவாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாடர்ன் தியேட்டரஸ் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க இன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆசைப்பட்டதாகவும், அதற்காக அரசு அந்த இடத்தை ஆக்கிரமித்து அராஜகம் செய்வதாகவும் இடத்தின் உரிமையாளர் குமுறி இருக்கிறார்.

கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாடர்ன் தியேட்டரஸ் நுழைவு வாயிலில் செல்பி ஒன்றை எடுத்தார். அங்கு இருந்து தான் பிரச்சனை எழுந்து இருக்கிறது. முதல்வர் ஸ்டலின் அவர்கள் ஆசைக்காக தான் அங்கு செல்பி எடுக்கிறார் என்று நினைத்தவர்களுக்கு அந்த இடத்தை ஆக்கிரமிக்க தான் செல்பி எடுக்கிறார் என்று தெரியாமல் போய்விட்டது.

இந்நிலையில் தற்பொழுது இந்த நிலத்தை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திமுக அபகரிக்க முயற்சி செய்து வருவது அம்பலமாகி இருக்கிறது. கடந்த 13 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைய முக்கிய காரணம் நில அபகரிப்பு தான்.

பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தாலே நில அபகரிப்பு தலை விரித்தாடும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மேல் தான் இந்த நில அபகரிப்பு புகார்கள் வரும். ஆனால் இந்த முறை முதல்வர் ஸ்டாலின் அவர்களே ஒரு நிலத்தின் மீது ஆசைப்பட்டு அதை எப்படியவது அபகரித்து வளைத்து போட்டு விட வேண்டும் என்று நினைக்கிறார் என்று பிரச்சனை ஒன்று கிளம்பி இருக்கிறது.

இந்த மாடர்ன் தியேட்டரஸ் கம்பெனி இயங்கி கொண்டிருந்த காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் 500 ரூபாய் சம்பளத்திற்கு வசன கர்த்தாவாவாக வேலை பார்த்தார் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு மேடை நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் அந்த இடத்தின் நுழைவு வாயிலில் கருணாநிதி அவர்களின் சிலையை வைக்க ஸ்டாலின் அவர்கள் அந்த இடத்தின் உரிமையாளருக்கு சேலம் மாவட்ட ஆட்சியரை வைத்து குடைச்சல் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தை பற்றி ஊடகம் வாயிலாக நிலத்தின் உரிமையாளர் தெரிவித்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக ஒரு தனி நபரின் இடத்தை ஆக்கிரமிக்க நினைப்பது நியாயமா? இப்படி அராஜகம் செய்து அந்த இடத்தில் உங்கள் அப்பா சிலையை வைத்து அப்படி என்ன சாதித்து விடப்போகிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.