மழைக்காலம் இது இந்த மழைக்காலத்தில் சளி இருமல் காய்ச்சல் என பரவி வருகிறது. இதற்கு மருத்துவ வருடம் சென்று பணத்தை செலவழிக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இருமலை நிறுத்தலாம்.
நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் முந்தைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் அவரது மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள். ஆனால் அதையெல்லாம் நாம் விட்டுவிட்டு ஆங்கில மருத்துவர்களிடம் சென்று இல்லாத நோய்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
மழைக்காலங்களில் வரும் சளி மற்றும் இருமலை போக்க நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி நம்மை நாம் சரி செய்து கொள்ளலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவு பார்க்கப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
துளசி இலை
கற்பூரவள்ளி இலை
உப்பு
மிளகுத்தூள்
எலுமிச்சை சாறு
செய்முறை:
வெங்காயம் துளசி இலை கற்பூரவள்ளி இலை உப்பு ஆகிய இவை அனைத்தையும் எடுத்து நன்றாக தட்டி சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த சான்றுடன் சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்த குடித்து வரும் பொழுது சளி முற்றிலும் வெளியே வந்து இருமல் நின்று விடும்.