மகாபாரத போர் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். அது ஒரு மகா காவியம். அதில் பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரை பற்றி தான் மகாபாரதப் போர் என்று நாம் சொல்கின்றோம். இந்நிலையில் இறக்கும் தருவாயில் துரியோதனனின் மனதில் ஓடிக்கொண்டிருந்த மூன்று கேள்விகளுக்கு கிருஷ்ணன் பதில் சொல்லியது தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.
நூறு கௌரவர்களும் மற்றும் பீஷ்மரும் கர்ணனும் அவர்களது குருவும், துரியோதனிடம் நின்று அவனுக்காக போரிட்டார்கள். இப்படி அனைவரும் இறந்துவிட துரியோதனன் ஒருவன் மட்டுமே எஞ்சி இருந்தான்.
தனது 100 பிள்ளைகளில் ஒருவனாவது உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைப்பில் தான் அத்தனை நாள் கண்களை மூடி கிடந்து தன் கணவனுக்காக இருந்ததை தனது மகனுக்காக துரியோதனின் தாய் தனது அத்தனை சக்தியையும் சேர்த்து வஜ்ரமான உடலை துரியோதனனுக்கு தந்தார்.
துரியோதனின் அந்த வஜ்ரமான உடலை யார் என்ன செய்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அத்தனை பலம் பொருந்திய பீமன் தனது கஜாயுதத்தால் அடித்தாலும் கூட அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. இதனால் பெரும் இறுமாப்பில் இருந்தான் துரியோதனன்.
என்னதான் துரியோதனின் தாய் அவனது உடலை வஜ்ரமாக மாற்றினாலும் இடுப்பிற்கு கீழே அது வஜ்ரமாக மாறவில்லை. அதனை எப்படியோ அறிந்த பீமன் துரியோதனனின் தொடைகளை தனது கதாயுதத்தால் பிளந்து அவனை சாகடித்தான்.
அப்படி அவனது தொடை பிளந்து ரத்தம் ஓடும் நிலையில் கூட அவனது எண்ணத்தில் மூன்று கேள்விகள் அவனை சாகவிடாமல் தடுத்து இருந்தது. அவனால் வாய் பேச முடியாவிட்டாலும் கிருஷ்ணன் அதை கண்டுபிடித்தார்.
உடனே கிருஷ்ணன் துரியோதனனிடம் துரியோதனா உனக்கு என்ன பதில் வேண்டும் நான் சொல்கிறேன் என கேட்டார்.
1. நான் அஸ்தினா புரத்தை சுற்றி கோட்டை சுவர்களில் எழுப்பியிருந்தால் என்ன செய்திருப்பாய்?
2. நான் அஸ்வத்தாமனை சேனாதிபதியாக நியமித்திருந்தால் என்ன செய்திருப்பாய்?
3. நான் விதுரரை போர் புரிய வைத்திருந்தால் என்ன செய்திருப்பாய்?
இதுதான் துரியோதனன் மனதில் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகள்.
கிருஷ்ணன் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார், துரியோதனா, நீ அஸ்தினாபுரத்தை சுற்றிலும் கோட்டை சுவர்களை எழுப்பி இருந்தால் நான் நகுலனை கொண்டு அந்த கோட்டைச் சுவர்களை தடுத்து இருப்பேன். நகுலனைப் போல் குதிரை ஓட்டுபவர்கள் யாரும் கிடையாது. ஒரு மழைத்துளி விழுந்து அடுத்த மழைத்துளி விழும் பொழுது அந்த மழை துளியை தாண்டும் அளவிற்கு அவன் திறன் படைத்தவன். அப்படிப்பட்டவனை கொண்டு உனது கோட்டை சுவர்களை தகர்த்தெறிய வைத்திருப்பேன் என்று கூறினார்.
துரியோதனா, நீ அஸ்வத்தாமனை சேனாதிபதியாக நியமத்திருந்தால் நான் தர்மனை கோபப்பட வைத்திருப்பேன், ஏனென்றால் எப்பேர்பட்ட வீரனாக இருந்தாலும் தர்மன் கோபப்பட்டால் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் , எனவே நான் தர்மரை கோபப்பட வைத்திருப்பேன் என கிருஷ்ணன் முடித்தார்.
மூன்றாவது கேள்வியான, நீ விதுரரை போர் புரிய வைத்திருந்தால் நானே களத்தில் இறங்கி அவருடன் போர் புரிந்திருப்பேன் என்று அவர் சொன்னார்.
இந்த மூன்று கேள்விகளுக்கு விடை தெரிந்து மனம் சாந்தி பெற்ற துரியோதனன் உயிர் பிரிந்தான்.