சுந்தர்ராஜன் அவர்களைப் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும் அவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு இயக்குனர் என்பது சிலருக்கு தான் தெரியும். அவர் நடித்த மற்றும் இயக்கிய பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கண்டுள்ளது.
வில்லன் காமெடி என்கிற அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் அவர். கொடுத்த வேடங்களில் கச்சிதமாக நடிப்பவரும் அவர். அவர் நாடகங்களை மட்டுமே நடித்து வந்த அவர் தனது படங்கள் வெள்ளித்திரையில் பார்த்தால்தான் அனைவரும் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள் என வெள்ளித்திரையில் தனது படங்களை இயக்கினார்.
மேலும் சூரிய வம்சம், பாட்டாளி போன்ற படங்களில் நன்றாக நடித்து தனக்குரிய இடத்தை மற்றும் தனக்குரிய ஒரு ரசிகர் பட்டாளத்தையே பெற்றிருந்தார் என்றே கூறலாம்.
பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சுந்தர்ராஜன். இப்பொழுது வயதாகி விட்டதால் நாடகங்களில் அப்பா வேடங்களில் நடித்து வருகிறார்.
இப்படி மோகன் மற்றும் அமலா நடிப்பில் வெளிவந்த மெல்ல திறந்தது கதவு என்ற படத்தை இயக்கியவர் இவர்தான்.
பேட்டி ஒன்றில் மோகனுக்கு இது வராது என்று ஓபன் ஆக தெரிவித்துள்ளார். அது என்னவென்று தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.
மெல்லத் திறந்தது படபடப்பின் போது மோகன் இயக்குனரான சுந்தரராஜன் அவர்களிடம் இந்த படத்தில் சண்டை காட்சிகள் எனக்கு ஒரு சண்டைக் காட்சிகள் வேண்டும் அதை நடிப்பதற்கு எனக்கு ஆசையாக இருக்கின்றது என்று கேட்டுள்ளார்.
அதற்கு மிகவும் சிரிப்புடன் “இந்த படம் முடிவதற்குள் நீயும் நானும் சண்டை போடுவோமா என்றே தெரியவில்லை இதில் உனக்கு சண்டை காட்சி வர கேட்கின்றதா” என்று மோகனின் ஆசையை நிராசையாக மாற்றி உள்ளார் இயக்குனர் சுந்தர்ராஜன்.
சண்டை காட்சி என்றால் அதில் ஒரு உணர்ச்சி இருக்க வேண்டும். கண்களில் உணர்ச்சி பொங்க வேண்டும். அது மோகனிடம் எதிர்பார்க்க முடியாது. மோகன் இடம் இல்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் இயக்குனர் சுந்தர்ராஜன்.