இப்படியுமா? நடந்தது? நடிகையிடம் மன்னிப்பு கேட்க சொன்ன சிவாஜி! என்ன நடந்தது?

0
632
#image_title

நடிப்பின் திலகம் நடிப்பின் நாயகன் என்ற பெயர் அவருக்குத் தவிர யாருக்கும் பொருந்தாத என்றே சொல்லலாம். அற்புதமான நடிப்பின் மூலம் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு கூட மிகவும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் சிவாஜி அவர்கள். இப்படி அவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் நமக்கு கிடைத்துள்ளது.

 

ஒரு படத்திற்கு மிகவும் தாமதமாக வந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவாஜி சொல்ல, முடியாது! என்று அரைகுறை மேக்கப்புடன் தனது காரில் ஏறி சென்ற ஒரு கதாநாயகியின் கதை தான் இது.

 

நாடக நடிகராக இருந்த சிவாஜி அவர்கள் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த பராசக்தி என்ற படத்தின் மூலம் தன் அற்புதமான நடிப்பை காட்டி அனைவரையும் வியக்க செய்துள்ளவர் தான் அவர். கைத்தேர்ந்த நடிகர்கள் கூட இப்படி நடிக்க முடியாது என்ற அளவிற்கு அன்றைக்கே அந்த பட்டத்தை வாங்கியவர் சிவாஜி.

 

ஒவ்வொரு படத்திலும் நடிப்பதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு படத்திற்கும் தனது வித்தியாசமான வேடங்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்தவர் அவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் அவர் நடித்தார். அவரோடு நடிக்க அனைத்து நடிகை நடிகர்களும் போட்டியிட்டார்கள் என்று சொல்லலாம். 80 களில் வந்த ராதா மற்றும் சிம்ரன் விஜய் ஆகியோர்களிடம் ரஜினி அவருடன் நமது சிவாஜி நடித்தார்.

 

அப்படி சிவாஜிக்கும் வெண்ணிற ஆடை நிர்மலா அவருக்கும் நடந்த ஒரு சம்பவமே இங்கு கூறப்பட்டுள்ளது.

 

வெண்ணிற ஆடை நிர்மலா என்ற படத்தின் மூலம் நிர்மலா அறிமுகமானவர். அவர் சிவாஜியுடன் எத்தனையோ படங்கள் சேர்ந்து நடித்திருக்கிறார்.

 

சிவாஜி மற்றும் வாணிஸ்ரீ லதா அவர்களின் நடிப்பில் சிவகாமியின் செல்வன் என்ற படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்திருக்கிறார்.

 

இந்த படம் முழுவதும் ஊட்டியில் எடுக்கப்பட்டது. அப்படி அந்த படப்பிடிப்பதற்கு வரவேண்டிய வெண்ணிற ஆடை நிர்மலா தனது ரயிலை தவற விட்டதால் வரமுடியாமல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாடகைக்காரர் எடுத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு வந்துள்ளார் வெண்ணிற ஆடை நிர்மலா . அப்பொழுது படத்தில் நடிப்பதற்காக ஒப்பனைகளை செய்து கொண்டிருந்த அவரிடம் சிவாஜியின் உதவியாளர் வந்துள்ளார்.

 

சிவாஜியின் உதவியாளர் வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் நீங்கள் மிகவும் தாமதமாக வந்ததால் சிவாஜி மிகவும் கோபமாக இருக்கிறார்.நீங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று கூற, மன்னிப்பு கேட்க முடியாது என்பது போல் உடனடியாக தனது டிரைவரை வர சொல்லி காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார் வெண்ணிறாடை நிர்மலா.

 

பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு பதிலாக வேறு ஒருவர் நடித்துள்ளார். அந்த படமும் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பின் ஒரு விருது விழாவில் கூட சிவாஜியை சந்தித்த வெண்ணிற ஆடை நிர்மலா அவரிடம் பேச முடியாமல் தயங்கி நின்ற பொழுது, சிவாஜியே வந்து அவரிடம் பேசிய பின்பு தன் அவர் உள்ளம் புரிந்துள்ளது  அதன்பிறகு தான் தனது தவறான செயலை உணர்ந்துள்ளார் இந்த சுவாரசியமான தகவலை தெரிவித்தார்.

 

author avatar
Kowsalya