ஏறுமுகத்தில் தங்கம்..! இன்றைய விலை நிலவரம்..!!
எதிர்பாராத செலவுகளுக்கு தங்கத்தை தவிர வேறு எவையும் உதவாது என்பதினால் சாமானியர்கள் தங்களால் முடிந்த அளவு தங்கத்தை சேமித்து வருகின்றனர். சிறந்த எதிர்கால முதலீடாக உள்ள தங்கம் பார், காசு மற்றும் ஆபரணமாக விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களாக தங்கம் மளமளவென அதிகரித்து விற்பனையாகி வருகிறது.
நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,875 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் உயர்ந்து இருக்குறது.
அதன்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,880க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,040க்கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.51,320க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.80.70 ரூபாய்க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.80,700க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை சில தினங்களாக அதிகரிக்கத் தொடங்கி இருப்பது சாமானியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.