கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்!
நீங்கள் எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் பைரவரை வழிபட்டு பரிகாரம் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்து வர வேண்டும்.
பரிகாரம் செய்யும் முறை…
முதலில் ஒரு சிறிய வெள்ளை துணியில் 27 மிளகை வைத்து முடிச்சு போட்டு கொள்ளவும். இந்த முடிச்சை இரவு தூங்கும்போது உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.
மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விட்டு மிளகு ,முடிச்சியை கோயிலுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
அங்கு பைரவர் சிலைக்கு முன் ஒரு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இந்த மிளகு முடிச்சியினை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். பின்னர் நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்கள், எவ்வளவு கடன் வாங்கினீர்கள் என்பதை கூறி, விரைவில் கடன் முழுவதும் அடைய வேண்டும் என்று மனதார வேண்டி வழிபட வேண்டும்.
இதை தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் எளிதில் அடைந்து விடும்.