MGR ஆரம்பித்த ஸ்டுடியோ! சிவாஜியை ஒதுக்கிய MGR!

Photo of author

By Kowsalya

எம்ஜிஆர் ஆரம்பித்த ஸ்டூடியோ விற்கு சிவாஜி அழைக்கவே இல்லையா ஒருமுறை இயக்குனரான ஸ்ரீதர் அதை பற்றி கூறும் பொழுது ,

 

அந்த நேரத்தில் நடிகர் திலகத்தோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு எந்த படம் பண்ணவில்லை. ஆனால் மற்றவர்களோடு தான் படம் பண்ணிக் கொண்டிருந்துள்ளார்.

 

‘இப்பொழுது ஸ்ரீதரின் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்பொழுது சிவாஜி போன் செய்து பாராட்டி உள்ளார்.

 

உன் பேரை சொன்னாலே அழுமூஞ்சி டைரக்டர் என பெயர் எடுத்து வைத்திருந்தாய். ஆனால் இந்த படம் அனைத்தையும் சாப்பிட்டுவிட்டது. மற்றவர்கள் மூன்றில் கரியை பூசினார் போல் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் சிவாஜி அவர்கள் எனக்கு கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். என்று ஶ்ரீதரிடம் கூறியுள்ளார். சண்முகம் மேனஜர் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச் சொல்றேன்’ என்று சொல்லி உள்ளார்.

 

உடனே ஶ்ரீதர் . ‘அண்ணே, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்’ என சொல்லி உள்ளார்.

 

ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் இயக்குனர் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை.

 

இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் சிவாஜி கேட்பார், மேலும் ‘அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சு தான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்’ என்று சொன்னேன். அதே போல் தான் சொன்ன மாதிரியே அந்தக் கதையை அவரை வச்சு பண்ணினேன் என்று ஶ்ரீதர் சொன்னார் . கோவை செழியன் தான் தயாரிப்பாளர். ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற அந்தக் அதே கதை கதை தான் ‘ஊட்டி வரை உறவு’ என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது. மாபெரும் வெற்றியும் பெற்றது.

 

சில பல காரணங்களால் ஶ்ரீதர் அவர் வைத்து தயாரித்து இயக்கி வந்த ஹீரோ 72′ படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டிருந்த போதிலும், (பின்னாளில் இப்படம் ‘வைர நெஞ்சம்’ என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியானது) சிவாஜிக்கும் மற்றும் ஶ்ரிதருக்கும் இருந்த நட்பில் விரிசல் எப்பொழுதுமே விழுந்ததில்லையாம்.

 

பின் ஒரு நாளில் ‘உரிமைக்குரல்’ பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்துள்ளார்.

அப்பொழுது சிவாஜி ‘பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (MGR) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இதுவரைக்கும் ஒருநாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வரமுடியும் சொல்லு. என கூறி இருக்கிறார். ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் உண்டு’ என்று வாழ்த்தினார்”.

இவ்வாறு இயக்குனர் ஸ்ரீதர் கூறியிருந்தார்.