2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

0
338
#image_title

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

*ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது.

*பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது.

*பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் உயிரிழந்தனர்.

*மார்ச் 24: பிரதமர் மோடி குறித்த அவதூறு கருத்திற்காக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

*மே 03: மணிப்பூரில் குகி – மொய்தி இன மக்களிடையே வன்முறை கலவரம் வெடித்தது.

*மே 06: இங்கிலாந்து மன்னரான 3 – ஆம் சார்லஸ் முடி சூட்டப்பட்டார்.

*மே 10: கர்நாடக சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது.

*மே 19: ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது.

*ஜூன்: காலிஸ்தான் பயங்கரவாதி கொலையால் இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.

*ஜூன் 02: ஒடிஷா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதிய கோர விபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் பலியாகினர்.

*ஜூன் 14: பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாகத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.

*ஜூன் 18: நீரில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட டைட்டன் நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்த 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

*ஜூலை 14: சந்திரயான் 3 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

*ஜூலை 29: கடலூரில் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறை கலவரமாக வெடித்தது.

*ஆகஸ்ட் 07: பிரதமர் மோடி குறித்த அவதூறு கருத்திற்காக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி மேல்முறையீட்டின் மூலம் மீண்டும் எம்.பி ஆனார்.

*ஆகஸ்ட் 23: சந்திரயான் 3 செயற்கைகோளை நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரை இறக்கி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.

*ஆகஸ்ட் 24: சதுரங்க உலகக் கோப்பை இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய வீரர் பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தை பிடித்தார்.

*செப்டம்பர் 03: இந்தியாவின் ஆதித்யா – எல்.1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது.

*செப்டம்பர் 03: உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதன ஒழிப்பு குறித்து பேசி கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

*செப்டம்பர் 09: ஜி 20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் 2 நாட்களுக்கு நடைபெற்றது.

*செப்டம்பர் 14: சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகமூர்த்தி என்ற தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*செப்டம்பர் 25: கருத்து முரண்பாடு காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

*அக்டோபர் 07: இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கப்பட்டது.

*நவம்பர் 12: உத்திராகண்ட் சுரங்க விபத்து நடைபெற்று 41 சுரங்க ஊழியர்கள் 12 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டனர்.

நவம்பர்: மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. மிசோரமில் மாநில கட்சி ஆட்சியை பிடித்தது.

*நவம்பர் 19: 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 6 முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

*நவம்பர் 30: தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

டிசம்பர் 05: மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை கடுமையான சேதத்தை சந்தித்தது.

*டிசம்பர் 13: புதிய நாடாளுமனற கட்டிடத்தில் மஞ்சள் குண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

*டிசம்பர் 18: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, மாவட்டங்களில் வரலாறு காணாத பேய் மழை பெய்தது.

*டிசம்பர் 28: தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் இறைவனடி சேர்ந்தார்.