ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

0
421
#image_title

நல்ல நடிகர், ஒரு அரசியல்வாதி நல்ல பண்பாளர், நல்ல மனிதன், ஒரு கர்ணன் என்று சொன்னால் கூட மிகை ஆகாது தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள் அத்தனை மக்களின் பசியை ஆற்றிய அவர் நிஜமாவே நிஜ உலக கர்ணன் தான். அவரது மறைவு ஏற்பட்ட நிலையில் ஏகப்பட்ட மக்கள் அவரை காண்பதற்காக ஓடோடி வந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை தீவு திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் திரை உலக நடிகர்கள் அவரைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்கள். விஜயும் ரஜினிகாந்த்தும் சற்று முன்பு அவரது உடலை பார்க்க வந்து அஞ்சலி செலுத்தி சென்றிருக்கிறார்கள்.

 

அவரைப் பற்றிய சின்ன கதை தான் இது. கார்கில் போருக்கு மதுரையில் சினிமா கலைஞர்கள் திரை உலகினர் சார்பில் கலை நிகழ்ச்சி மாபெரும் கூட்டம் நடைபெற்றது. தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவர் இவர் . இவர் அனைத்து நடிகர் நடிகர்களையும் ஒரு ரயிலில் அங்கு கூட்டி செல்கிறார்.

 

முழுவதுமாகவே நடிகர் நடிகைகளுக்காக புக் செய்யப்பட்டுள்ளது அந்த ரயில். நடிகைகள் வரமாட்டார்கள் என்று நினைத்த பொழுது அவர் அந்த நேரத்தில் மிகவும் பேமஸ் ஆக இருந்து சிம்ரன் ஜோதிகா லைலா அனைவருக்கும் கால் செய்து நீங்கள் வந்து தான் ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அனைத்து திரை உலகினையும் அந்த ஒரு ட்ரெயினில் புக் செய்து கூட்டிச் செல்கிறார் மதுரைக்கு.

 

இது கொஞ்சம் நேரம் செல்லவே மக்கள் ஆரவாரத்துடன் கூடிவிட்டனர். அவ்வளவு மக்கள் திரையுலகினரை பார்க்க அங்கு கூடிவிட்டனர். அங்கிருந்து போலீசார்கள் வந்து நிலைமை மீறிவிட்டது மக்கள்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நீங்கள் எப்படியாவது நடிகர்களை கிளம்ப சொல்லி விடுங்கள் என்று போலீசார்கள் விஜயகாந்த் இடம் தெரிவிக்கிறார்கள்.

 

நடிகர்கள் நடிகைகள் செல்ல செல்ல மக்கள் பின்னாடி ஓடி வருகிறார்கள் நிலைமையை சரி செய்ய விஜயகாந்த் என்ன செய்கிறார் என்றால் அனைவரையும் எந்த கம்பார்ட்மெண்ட் கிடைக்கிறதோ ஏறி அமருங்கள் என்று அந்த ட்ரைனை நிறுத்தி அதில் ஏற சொல்லுகிறார்.ரயில் கிளம்பியதற்கு பின் தான் யாரும் சாப்பிடவில்லை என்று தெரிய வருகிறது. அவர்கள் பசியில் வாடுவார்கள் என்று நினைத்த விஜயகாந்த் கேட்கிறார் அடுத்த ரயில் எங்கு நிற்கும் என்று.

 

அடுத்து ஒரு சின்ன ஸ்டேஷனில் வண்டி நிற்கும் என்று கேள்விப்பட்ட விஜயகாந்த் ஸ்டேஷன் மாஸ்டர் அனைவரையும் பேசி கொஞ்ச நேரம் வண்டியை நிற்க சொல்லி பெர்மிஷன் கேட்கிறார்கள். ஆனால் கொஞ்சம் தடுமாறினாவே சிக்னல் மாறிவிடும் என்ற காரணத்தால் கிடைத்த கேப்பில் என்ன செய்யலாம் என்று யோசித்து விஜயகாந்த் அங்கு ஒரு சிறிய ஹோட்டல் இருக்கிறது, அங்கு போய் நின்றவுடன் அந்த ஹோட்டல் காரர் திகைத்து நிற்கிறார், இவ்வளவு பெரிய மனுஷன் வந்து நிற்கிறாரே என்று, அவருக்கு ஒன்றும் புரியவில்லை, இருக்கிற என்னென்ன இருக்கிறதோ அதை எடுத்து போடுங்கள் பரோட்டா சால்னா என அனைத்தையும் வாங்குகிறார் விஜயகாந்த், வாங்கி முடித்தவுடன் அவர் காசு வாங்க மாட்டேன் என்கிறார் அந்த ஹோட்டல் கடைக்காரர் , இருந்தாலும் பரவாயில்லை என்று காசை கொடுத்துவிட்டு பரோட்டாவையும் சால்னாவையும் எடுத்து வந்து தருகிறார். அவ்வளவு பெரிய தாஜ் ஹோட்டலில் இருந்த நடிகர் நடிகைகள் அங்கு சாப்பிட்ட நடிகைகள், அந்த பரோட்டாவை அப்படி சாப்பிட்டார்கள் என்று கூறுவார்கள்.

 

இதை ஒருத்தனாய் நின்று முடித்தவர் விஜயகாந்த் அவர் இல்லை என்றால் அத்தனை பேரையும் சமாளித்து இருக்க முடியாது.

 

அவ்வளவு பெரிய ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோமே என்பதுதான் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleவிஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?
Next articleஎம்.ஜி.ஆர் நடித்த படங்களின் உள்ளம் தொட்ட பாடல்கள் ஓர் பார்வை!!