2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! 

0
280
#image_title
2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்!
கடந்த 2023ம் ஆண்டில் மட்டுமே பெண்களுக்கு எதிராக 28000க்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணையம் நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள், புகார்கள் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் “நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 28811 குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ளது. பெரும்பாலும் வரதட்சனை கொடுமை, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை முயற்சி, பாலியல் சீண்டல் முதலிய பிரிவுகளில் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் அதிகபட்சமாக பாஜக ஆளும் மாநிலமான உத்திரப் பிரதேச மாநிலம் 16109 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் 2411 வழக்குகளுடன் டெல்லி இடம் பெற்றுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலம் 1343 வழக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் பதியப்பட்டுள்ள 28811 வழக்குகளில் 4797 வழக்குகள் வரதட்சணை தொடர்பாக பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous articleMR ராதா MGR- யை சுட்டதன் காரணம்? பெண் பிரச்சனையா? பண பிரச்சனையா?
Next articleபுத்தாண்டில் ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சி! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!