எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?
*ஞாயிற்றுக் கிழமை
வாங்கிய கடனை கொடுக்க உகந்த நாள். தொழில் ஆரம்பிக்க உகந்த நாள்.
வேலைக்கு செல்ல உகந்த நாள். அசைவம் சாப்பிடக் கூடாத நாள்.
கோயிலுக்கு செல்ல, பரிகாரம் செய்ய, திருமணம் செய்ய உகந்த நாள்.
இரும்பு பொருட்கள் வாங்க உகந்த நாள் அல்ல.
*திங்கட் கிழமை
தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள்.
வேலை சார்ந்த பயணம் மேற்கொள்ள உகந்த நாள்.
இரும்பு பொருட்கள் வாங்க உகந்த நாள் அல்ல.
வீடு கட்ட, மனை வாங்க உகந்த நாள் அல்ல.
*செவ்வாய் கிழமை
வீட்டு துடைக்க கூடாது. நகம் வெட்டக் கூடாது.
வாங்கிய கடனை கொடுக்க உகந்த நாள்.
நகை வாங்க உகந்த நாள் அல்ல.
சுப காரியங்கள் துவங்க உகந்த நாள் அல்ல.
இரும்பு பொருட்கள் வாங்க உகந்த நாள்.
*புதன் கிழமை
நகை வாங்க உகந்த நாள். நகை அடகு வைக்கக் கூடாது.
எண்ணெய் குளியலுக்கு உகந்த நாள். உவர்ப்பு தன்மை கொண்ட பொருட்களை உண்பது சிறப்பு.
பித்தளை பொருட்களை வாங்க உகந்த நாள். அசைவம் சாப்பிடக் கூடாது.
*வியாழக் கிழமை
வீட்டை துடைக்க உகந்த நாள்.
துணி துவைக்க உகந்த நாள். கோயிலுக்கு சென்று வர உகந்த நாள்.
தங்கம் வாங்க உகந்த நாள்.
சுப காரியங்களுக்கு உகந்த நாள்.
அசைவம் சாப்பிடக் கூடாது.
*வெள்ளிக்கிழமை
வீடு துடைக்க கூடாது. நகம் வெட்டக் கூடாது.
கடன் வாங்க உகந்த நாள் அல்ல.
நகை வாங்க உகந்த நாள்.
பூஜை அறையை சுத்தம் செய்வது நல்லது. சுப காரியங்கள் செய்ய உகந்த நாள்.
துணி துவைக்க உகந்த நாள் அல்ல. வீட்டில் அழுக்குத் துணிகளை சேர்த்து வைத்திருக்க கூடாது.
முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது.
*சனிக்கிழமை
இரும்பு பொருட்கள் வாங்கக் கூடாது. கூர்மையான ஆயுதங்கள் வாங்கக் கூடாது.
எண்ணெய் வாங்கக் கூடாது. உப்பு வாங்கக் கூடாது.
கோயிலுக்கு செல்ல உகந்த நாள்.
வீட்டை சுத்தம் செய்ய உகந்த நாள்.