பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..!
எங்கும் பணம்… எதற்கும் பணம்… பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பணத்தின் தேவை அவசியமாயிற்று.
இந்த பணத்தை சம்பாதிப்பது முக்கியம்.. அதை முறையாக சேமிப்பதும், கையாள்வதும் அதை விட முக்கியம் ஆகும்.
பணத்தை கையாள்வதில் பல வழிகள் உள்ளது. நாம் முறையாக கையாண்டால் செலவு செய்த பணம் இரு மடங்கு திரும்ப கிடைக்கும்.
பணத்தை எவ்வாறு கையாள்வது?
பணத்தை எண்ணும் பொழுது முன் பக்கம் பணம் இருக்கும்படி எண்ண வேண்டும். பின்பக்கம் அல்லது தலைகீழாக இருந்தபடி பணத்தை எண்ணக் கூடாது.
பணம் கசங்கியபடி, கிழ்ந்தபடி பர்ஸில் வைக்கக் கூடாது. பணத்தில் எந்த ஒரு கிறுக்கல், எதுவும் எழுதாமல் இருக்க வேண்டும்.
பணத்தை பர்ஸ் அல்லது பணப்பெட்டியில் வைக்கும் போது மடக்காமல் வைக்க வேண்டும்.
பணம் இருக்கும் இடத்தில் பணத்தை இருக்கும் கடவுள் படங்கள் இருப்பது இன்னும் சிறப்பு.
பணம் வைக்கும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு வைப்பது சிறப்பு.
நடுவிரல் மற்றும் ஆல்காட்டி விரலுக்கு இடையில் பணத்தை வைத்து மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
பணம் இரண்டாக மடக்கி இருந்தால் அதில் மடக்கிய பக்கம் நம்மை பார்த்தவாறு இருக்கும்படி அடுத்தவருக்கு கொடுத்தால் அதன் வரவு அதிகரிக்கும்.