பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

0
320
#image_title

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

பிரதோஷம் மாதம் ஒருமுறை வரக் கூடிய ஒன்று. இந்த நாளில் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். ஈஸ்வரனுக்கு பால், நெய், கனி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு எந்த வித பூஜை பொருள் வாங்கி கொடுத்தால் என்ன பலன் கிட்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பால்…

பாலை அபிஷேகப் பொருளாக கொடுத்தால் தீராத நோய் அனைத்தும் தீரும், நோயின்றி வாழ வழி பிறக்கும்.

தேன்…

தேனை அபிஷேகப் பொருளாக கொடுத்தால் வாழ்வு வளமாகும், நோய் தீரும், நல்லது மட்டும் நடக்கும்.

தயிர்…

தயிரை அபிஷேகப் பொருளாக கொண்டு சென்று கொடுத்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

கனி…

அபிசேஷத்திற்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்தால் விவசாயத்தில் நல்ல விளைச்சல் எடுக்க முடியும்.

நெய்…

நெய் இல்லாத அபிஷேகம் இல்லை. அபிஷேகத்திற்கு நெய் வாங்கி கொடுத்தால் நீண்ட ஆயுள் கிட்டும்.

பஞ்சாமிர்தம்…

இந்த பொருள் தெய்வ சக்தி கொண்டவை. இதை வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்தால் செல்வ செழிப்புடன் வாழ வழி பிறக்கும்.

இளநீர்…

இளநீர் குளிர்ச்சி நிறைந்த பொருள். இந்த பொருளை வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

எண்ணெய்…

எண்ணெய் வாங்கி கடவுள் அபிஷேகத்திற்கு கொடுத்தால் சுகமான வாழ்வு கிடைக்கும்.

பூக்கள்…

அபிஷேகத்திற்கு பூக்கள் வாங்கி கொடுத்தால் தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும்.

Previous articleமூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..!
Next articleகேரளா வாழைப்பழ போண்டா..! இவ்வாறு செய்தால் எச்சில் ஊரும்..!