ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! மாதம் 20 ஆயிரம் சம்பளம்!
வடசென்னையில் இயங்கி வரும் சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சீனியர் கவுன்சிலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
வேலை வகை – தமிழக அரசு வேலை
நிறுவனம் – ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை)
பதவி – சீனியர் கவுன்சிலர்
காலிப்பணியிடங்கள் – மொத்தம் 01
கல்வித்தகுதி – சீனியர் கவுன்சிலர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் social work or psychology பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் மேலாண்மை வளர்ச்சியில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். அதனோடு 2ஆண்டுகள் பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சீனியர் கவுன்சிலர் பணிக்கு வடசென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணபிக்க வேண்டும்.
வயது வரம்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மாத ஊதியம் – பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை – நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை – தபால்
சீனியர் கவுன்சிலர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் முறையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி
மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை -1
மின்னஞ்சல் முகவரி – oscnorthchennai@gmail.com
விண்ணப்பம் செய்ய இறுதி நாள் – 14.02.2024

