இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!
மாதம், கிழமை, நல்ல நேரம், சுப முகூர்த்த தினம், விடுமுறை தினம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வதற்காக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் காலண்டர் மாட்டப்பட்டு இருக்கின்றது.
இந்த காலண்டரில் மாதக் காலண்டர், தினக் காலண்டர் என இரு வகைகள் உள்ளது. இந்த இரண்டு காலண்டர்களிலும் சில விஷயங்களை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
பொதுவாக மாதக் காலண்டரில் ஏதேனும் ஒரு புகைப்படம் இடம்பெற்றிற்குக்கும். அதன் கீழ் மாதத்தின் கிழமை, தேதி இடம் பெற்றிருக்கும். இவ்வாறு உள்ள மாதக் காலண்டரில் சில படங்கள் இருந்தால் அதை தவிர்த்தல் நல்லது.
அதாவது ஆசாபாசத்தை தூண்டும் விதமாக உள்ள படங்கள், இடிந்த கட்டிடங்கள், காய்ந்த மரங்கள், சிதறிய பணம், குழந்தை அழுதல் போன்ற படங்கள் இருந்தால் அந்த காலண்டரை பயன்படுத்தக் கூடாது.
அதேபோல் கடவுள் படம் உள்ள காலண்டரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். காரணம் வரும் முடிந்த பின்னர் அந்த காலண்டரை தூக்கி எறிந்து விடுவோம். இதனால் கடவுளின் அனுக்கிரகமும் வெளியேறி விடும்.
ஒரு வருடம் முடிந்து விட்டால் அந்த வருடத்தின் காலண்டரை வீட்டில் வைத்திருக்காமல் அப்புறப்படுத்தி விட்டு புது வருடக் காலண்டரை வீட்டு சுவற்றில் மாட்டி வைக்கவும்.
இவ்வாறு மாட்டி வைக்கும் காலண்டரை திசை பார்த்து வைப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
காலண்டரை என்ன திசையில் மாட்ட வேண்டும்..?
*கிழக்கு திசை சுவற்றில் மாட்டலாம்.
*மேற்கு திசையில் மாட்டலாம்.
*கடன் பிரச்சனை இருப்பவர்கள் வடக்கு சுவற்றில் மாட்டலாம்.
ஆனால் தெற்கு சுவற்றில் மட்டும் காலண்டரை மாட்டி வைக்கக் கூடாது.