சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

Photo of author

By Divya

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றது. இதில் வடசென்னையில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “பன்முக உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை)

பதவி: பன்முக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித்தகுதி: ‘பன்முக உதவியாளர்’ பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் துறைசார்ந்த பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு வடசென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணபிக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதியம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.6,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் முறையில் பணிக்கு தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் முறையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை -1

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: பிப்ரவரி 14 ஆம் தேதி.