குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்!
தலைமுறையை காக்கும் குலதெய்வத்தை மகிழ்விக்க அவரின் அருளை பெற வீட்டில் குலதெய்வ பூஜை வரம் ஒருமுறை செய்து வர வேண்டும்.
அவரவர் குலதெய்வத்தை பொறுத்து இந்த பூஜையை எந்த நாளில் செய்யலாம்… என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஐயனார், பெரியாண்டிச்சி, முனியப்பன், சிவன், இருசாயி, ஒண்டி வீரன் என்று அவரவருக்கென்று குலதெய்வம் இருக்கும்.
இதில் ஐயனார், முனியப்பன் என்று காவல் தெய்வங்களை… குலதெய்வமாக கொண்டவர்கள் சனிக்கிழமை அன்று வீட்டில் குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.
உங்கள் குலதெய்வம் பெண் கடவுளாக இருந்தால் செவ்வாய்க்கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்வது நல்லது. அதேபோல் முருகன் குலதெய்வமாக இருந்தால்.. குலதெய்வ பூஜையை செவ்வாய்க் கிழமை அன்று செய்ய வேண்டும்.
பெருமாளை குலதெய்வமாக கொண்டவர்கள் புதன் கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.
சிவனை குலதெய்வமாக கொண்டவர்கள் திங்கட் கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.
சித்தர்களை குலதெய்வமாக கொண்டவர்கள் வியாழக் கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.
முனியாண்டி, முனீஸ்வரன், மதுரை வீரன் உள்ளிட்ட குலதெய்வத்திற்கு ஞாயிற்றுக் கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.
குலதெய்வ பூஜை செய்வது எப்படி?
உங்கள் குலதெய்வ பூஜை செய்ய உகந்த நாளில் ஒரு விளக்கை வாங்கிக் கொள்ளவும். இந்த விளக்கை வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றவும்.
அதற்கு முன் வெற்றிலை, பாக்கு, பழத்தை குலதெய்வ படங்களுக்கு முன் வைக்கவும். பிறகு பாலில் ஏலக்காய் சேர்த்து காய்ச்சி நெய்வேத்தியமாக படைக்கவும். அடுத்து விளக்கு ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து பூஜை செய்யவும். இதை தான் குலதெய்வ பூஜை என்று சொல்வார்கள். இந்த பூஜையை தொடர்ந்து செய்து வந்தால் நம் தலைமுறைக்கு குலதெய்வம் காவலாக இருக்கும்.