உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!
உங்கள் வீட்டு நிலைவசாலில் எண்ணெய் கொட்டினால் பண விரையம் ஆகும் என்று அர்த்தம்.
வீட்டில் நகை திருடு போவது, நீங்களே நகையை தவறவிடுவது.. இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பணம் தாங்காமல் போகும்.
ஒரு இடத்தில் நீங்கள் வைத்த பணத்தை மறந்தால்.. பண விரையம் ஏற்படும்.
தண்ணீரை வீணடித்தால் பண விரையம் ஏற்படும். பணம் சேமித்தாலும்.. அவை எதாவது ஒரு செலவு ஏற்பட்டு கரைந்து விடும்.
வீட்டில் கணவன்-மனைவிக்குள் காரணம் இன்றி சண்டை சச்சரவு ஏற்பட்டால் செல்வம் குறையும்.
வேலை அல்லது வேறு ஏதேனும் விஷயங்களில் ஒரு நல்ல வாய்ப்பு உங்களை விட்டு சென்றால் நீங்கள் பண பற்றாக் குறையால் அவதிப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் வாயில் உமிழ்நீர் ஊறிக்கொண்டே இருந்தால் நிதி பிரச்சனை வருவதற்கான அறிகுறிகள் ஆகும்.
உங்கள் வீட்டில் மழைநீர் ஒழுந்தால் நீங்கள் பணக் கஷ்டத்தை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் கைகளில் திடீர் மச்சம் தோன்றினால் பண விரையம் ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.