தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலை!

0
307
#image_title

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள இரவு காவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

கோவையில் புகழ்பெற்ற அருள்மிகு தண்டு மாரியம்மன் கோயிலில் இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

வேலை வகை – தமிழக அரசு வேலை

நிறுவனம் – அருள்மிகு தண்டு மாரியம்மன் கோயில்

பணி – இரவு காவலர்

பணியிடம் – கோயம்புத்தூர்

காலியிடங்கள் – மொத்தம் 02

தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு

18 முதல் 45 வயதுக்குள் இருக்கும் நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மாத ஊதியம்

இரவு காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1,6000/- முதல் ரூ.36,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

*நேர்காணல்

விண்ணப்பம் செய்யும் முறை – தபால் வழி

இரவு காவலர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அதனுடன் கேட்கப்படும் ஆவண நகலை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள் – 17.02.2024

Previous article9 வகையான பெர்ரி பழங்கள் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?
Next articleசுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!