செல்வம் மலைபோல் குவிய.. இந்த ஒரு பொருள் போதும்!
நகை, பணம், சொத்துடன் செல்வந்தர்கள் போல் வாழ பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த கனவு நனவாகுமா என்றால்.. முயற்சி, அதிர்ஷ்டம் உள்ள நபர்களுக்கு நடைபெறும் என்று சொல்லலாம்.
சமூகத்தில் இவை எல்லாம் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கின்றது. ஆனால் இன்றைய விலைவாசி உயர்வை பார்க்கும் பொழுது இதையெல்லாம் சேர்க்க முடியுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழத் தான் செய்கிறது.
செல்வம் மழைபோல் குவிய வேண்டும் என்றால் நீங்கள் ஏலக்காய் பரிகாரம் செய்ய வேண்டும். ஏலக்காய் நறுமணம் மற்றும் தெய்வ சக்தி கொண்ட ஒரு பொருள். இதை பணம், நகை உள்ள இடத்தில் வைத்தால் அவை ஈர்க்கப்பட்டு அதன் வரவு அதிகரிக்கும்.
அதுமட்டும் இன்றி வீட்டு பூஜை அறையில் ஏலக்காய் வைத்து வந்தால் அதன் நறுமணத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
ஏலக்காய் பரிகாரம்…
ஒரு பித்தளை செம்பில் எச்சில் படாத சுத்தமான தண்ணீர் ஊற்றி 3 ஏலக்காயை பிரித்து போட்டு சில நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பிறகு இந்த நீரை வீடு முழுவதும் தெளிக்கவும். இவ்வாறு செய்வதினால் பணம், நகை ஈர்க்கப்படும். இதனால் செல்வந்தர்கள் ஆகும் கனவு நிறைவேறும்.