தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டு பூஜை அறை விளக்கை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும்..!

0
342
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டு பூஜை அறை விளக்கை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும்..!

வீட்டு பூஜை கோயில் போன்றது. பூஜை அறையை ஒட்டடை இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

காய்ந்த மலர், கனி இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இல்லையென்றால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் ஊடுருவி விடும்.

வீட்டு பூஜை அறையை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டுமோ… அதேபோல் பூஜை பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வீடு, பூஜை அறையை சுத்தம் செய்வதில் நாள் கிழமை பார்ப்பது முன்னோர்கள் காலத்தில் இருந்து வழக்கமாக இருந்து வருகிறது.

செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் வீட்டையோ, பூஜை அறையையோ சுத்தம் செய்யக் கூடாது என்பது வழக்கமாக கடைபிடித்து வருகிறது. அதேபோல் தான் பூஜை அறை பொருட்களை சுத்தம் செய்வதிலும் நாள் கிழமை பார்க்க வேண்டும்.

பூஜை அறை விளக்கை செவ்வாய், வெள்ளியை தவிர்த்து இதர நாட்களில் சுத்தம் செய்யலாம்…

இவ்வாறு எந்த நாட்களில் சுத்தம் செய்தால் என்ன பலன் உண்டாகும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….

வாரத்தின் முதல் நாளான ஞாயிறு அன்று பூஜை அறை விளக்கை சுத்தம் செய்தால் உடலில் ஏற்பட்ட நோய்கள் தீரும்.

திங்கள் அன்று விளக்கை சுத்தம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். புதன் கிழமையில் விளக்கை சுத்தம் செய்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். வியாழன் அன்று பூஜை விளக்கை சுத்தம் செய்தால் கவலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சனிகிழமையில் விளக்கை சுத்தம் செய்தால் விபத்துகள் ஏற்படாது…