குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..!
குப்பையில் இருந்து பணம் சேமிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா… ஆம் நாம் வீண் என்று தூரம் தூக்கி வீசும் பொருட்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.
பணத்தை சம்பாதித்து தான் சேமிக்க வேண்டும் என்று அல்ல.. சுலபமான முறையில் வேலை செய்யாமல் கூட பணம் சேமிக்கலாம்…
பணம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது. பணம் சேமிக்க பல வழிகள் இருக்கிறது. அதில் சில எளிய வழிகள் உங்களுக்காக…
வீட்டில் பயன்படுத்தி தூக்கி எறியும் நிலையில் உள்ள நோட், புத்தகங்களை எடைக்கு போட்டால் நல்ல காசு பார்க்க முடியும்.
அதேபோல் நீங்கள் செய்தித்தாள் படிக்கும் நபராக இருந்தால் பழைய செய்தித்தாளை பண்டல் பண்டலாக கட்டி வைக்காமல் அதை எடைக்கு போட்டால் நல்ல பணம் கிடைக்கும். அதிலும் ஆங்கில செய்தித்தாள் 1 கிலோ 15 ரூபாய் வரை வாங்கப்படுகிறது.
வீட்டில் உள்ள துருப்பிடித்த இரும்பு, உடைந் தகரம், அலுமியம், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால்… எடைக்கு போட்டு பணம் பார்க்கலாம்.
பால் பாக்கட் வாங்கும் பழக்கம் உள்ளவர்கள் பால் கவரை சேமித்து வைத்து எடைக்கு போடலாம். 1 கிலோ பால் பாக்கட் கவர் ரூ.30 வரை விற்கப்படுகிறது.
தேங்காயை சமையலுக்கு பயன்படுத்தி விட்டு அதன் ஓட்டை தூக்கி எரியாமல் சேமித்து
வைத்து வந்தால் ஒரு கிலோ ரூ.8 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.