நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்!

0
277
#image_title

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்!

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பாதிப்பும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ தலைமையில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக செயலாளர் வைகோ பேசியதாவது,
“இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் தற்போது முரண்பாடுகள் நிறைந்த சூழ்நிலைகள் இருந்தாலும் விரைவில் சமூகமான நிலையை எட்டும் என நம்புகிறோம். பாஜக கூட்டணியில் கூட தான் சலசலப்பு நிலவி வருகிறது. எனவே தேர்தல் நெருங்க நெருங்க சுமுகமான சூழல் உருவாகும்.

இந்தியா கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார் விலகலால் இந்தியா கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இவிஎம் மிஷினை ஹேக்கிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என நம்பிக் கொண்டிருக்கிறது.

ராமர் கோவிலை கட்டியதன் மூலம் மதவாத அரசியலை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் ஒன்றிய அரசு உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கூடாது என ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நாடாளுமன்ற தொகுதியும், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பும் கேட்டுள்ளோம். மேலும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் கேட்டுள்ளோம்.”

Previous articleகடின உழைப்பில் கிடைக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க எளிய பரிகாரம்!
Next articleB.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!