B.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!

0
229
#image_title

B.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி:

* Engineer

காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் B.E படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 23.02.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]